“நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் துணை வேந்தர்கள் நியமிக்க முடியவில்லை” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல 6,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மாணவர்களுடன் ஆலோசனை நடத்தியதில் கல்லூரி மற்றும் விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், வகுப்பறை கட்டடங்களை அதிகரித்து தர வலியுறுத்தி உள்ளனர். விளையாட்டு அரங்கம், நூலகம், பேருந்து வசதிகள் செயல்படுத்தி தர கோரியுள்ளனர். உயர்க்கல்வி துறை சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவிலேயே மதுரையில் கல்விக் கடன்கள் பெற்றுத் தரப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு சென்று வங்கி கடன்கள் பெற்றுத் தரப்பட்டது. தமிழகத்தில் உள்ள 2,750 கல்லூரிகளுக்கு கல்விக் கடன்களை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசு வங்கிகளுக்கு கடன் பினை கொடுக்கிறது. இத்திட்டம் இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லை.

7,50,000 முதல் 20,00,00 வரை கல்விக் கடன்களுக்கு தமிழக அரசு கல்விக் கடன்கள் வழங்கப்படவுள்ளது. திமுக ஆளுநருடன் கருத்து முரண்பாடு காரணமாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் துணை வேந்தர்கள் நியமிக்க முடியவில்லை.

தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும், தவறு செய்த திமுகவினர் தண்டனையை கௌரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். தமிழகத்தில் 9,000 பேராசிரியர்கள் பணிகள் காலியாக உள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல 6,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளது. விரைவில் 2,708 பேராசியர்கள் TRB வழியாக நியமிக்கப்பட உள்ளனர். அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை உயர்வு கவலை அளிக்கிறது. விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் 8,000-க்கும் மேற்பட்ட கௌரவ பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். TRB மூலம் பேராசிரியர்கள் தேர்வு செய்வதில் கௌரவ பேராசிரியர்களும் தேர்வுகளை எழுதியுள்ளனர். தவெக அரசு அமைந்த உடன் கௌரவ பேராசிரியர்களுக்கு 5,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.