3-வது டி20 : நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

3வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சா்ச் நகரில் அக்.22-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 226 என்ற இலக்கை இரண்டு பந்துகள் மிச்சமிருக்க 19.4 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 அக்.24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் ஹென்றி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மாவும், வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

அணி விவரம் :

இந்தியா : சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ப்ரின்ஸ் யாதவ்

நியூசிலாந்து : டிம் சீஃபர்ட் (wk), ஃபின் ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (c), கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.