முக்கியச் செய்திகள் உலகம்

பண மோசடி வழக்கு; மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு சிறைத்தண்டனை!

பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம் கோபினுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி. இவர் தென்னாப்பிரிக்காவில் எம்பியாக இருந்துள்ளார். அத்துடன் பல்வேறு சமூக செயல்பாடுகளுக்கான அமைதி விருதை பெற்றுள்ளார். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம் கோபின். இந்தநிலையில், ஆஷிஷ் லதா ராம் கோபின் மீது மகராஜ் என்ற தொழிலதிபர் பணமோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், ஆஷிஷ் லதா தனக்கு இந்தியாவில் இருந்து சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஆர்டர் கிடைப்பதற்காகவும், அதற்கான இறக்குமதி வரி செலுத்த தன்னிடம் பணம் இல்லை எனவும் அதை கொடுத்தால், கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்ளலாம் என கூறி ஆர்டர் கிடைத்ததற்கான கடிதங்களை கொடுத்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்ததையடுத்து அவர் கடந்த 2015ம் ஆண்டு இதுகுறித்து டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், பொய் ஆவணங்களை சம்ர்பித்து பணம் பெற்ற குற்றத்திற்காக ஆஷிஷ் லதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement:

Related posts

அதிமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி

Gayathri Venkatesan

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Karthick

அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!

எல்.ரேணுகாதேவி