மீண்டும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்: கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இந்த சலுகையா? – பெ. சண்முகம் கேள்வி!

மோடியின் நண்பர்களான முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அதிகாரப்பூர்வமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “2016 ஆம் ஆண்டு ஒருநாள் இரவு கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பொதுமக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் மோடி. பிறகு ரூ.2000 நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டனர். இதனால் கருப்பு பணம் மேலும் அதிகரித்தது. பிறகு 2023 ஏப்ரல் 30 க்குள் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்று காலக்கெடு வைத்தனர்.

இப்போது ரூ.2000 நோட்டுகளில் 5451 கோடி ரூபாய் திரும்ப வரவில்லை என்று மீண்டும் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் நண்பர்களான முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அதிகாரப்பூர்வமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.