உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடையும், எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடையும் தமிழக அரசு விதித்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழப்பு சம்பவங்களை குறைக்கும் வகையில், எலிக்கொல்லி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடர்ச்சியாக, தற்போது 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உட்பொருளை கொண்ட எலி மருந்து பேஸ்ட்டை நிரந்தரமாக தடை செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று 6 அபாயகர பூச்சி கொல்லி மருந்துகளுக்கும், 60 நாள் தடை விதிக்க வேளாண்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபோஸ், அசிபேட், ப்ரோஃபெனோபோஸ்+ சைபர்மெத்ரின் மற்றும், குளோர்பைரிபாஸ் + சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை பெற்றிட ஒன்றிய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும் தடையை மீறி ஆன்லைனில் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.