முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது பெருமை அளிக்கிறது – நடிகர் விஷால்

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது பெருமை அளிக்கிறது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் அடுத்த சில நாட்களில் வெளி வர உள்ள நிலையில்
திருச்சி தெப்பக்குளம் எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் இன்று நடிகர் விஷால் மற்றும் குழுவினர் வருகை தந்தனர். ரசிகர்களை சந்தித்து நடிகர் விஷால் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தால் அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது தற்போது கான்ஸ்டபிளாக நடித்திருப்பது தான் இந்த படத்தின் வித்தியாசம். இந்த படத்தில் கடைசி 45 நிமிடங்கள் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும் என்றார்.

ஓ.டி.டி 20 முதல் 25 சதவீதம் சினிமா பார்க்கும் மக்களை எடுத்து சென்று
விட்டது. இருந்தப்போதும் நல்ல கதை அம்சம் இருக்கும் திரைப்படங்களை மக்கள்
திரையரங்கிற்கு வருகிறார்கள். ஓ.டி.டியால் பார்வையாளர்கள் குறையவில்லை
பிரிந்து தான் இருக்கிறார்கள் என்றார்.

அத்துடம், விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பல படங்கள்
இருப்பதால் என்னால் நடிக்க முடியாது. நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம்.  ஆனால் தேர்தலை நிறுத்தி மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதை கட்டுவோம் எம்றார்.

விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை நேரமும் காலமும் வரும் போது நல்ல கதையாக விஜய்யிடம் கூறுவேன். தொடர்ச்சியாக படம் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அரசியலுக்கு வருவது தொடர்பாக அதற்குரிய காலம் வந்தால் தான் பதில் கூற முடியும் என்றார்.

மேலும், என் நண்பர்களான ராஜா, மகேஷ் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் உதயநிதியும் இணைந்துள்ளார். அது எனக்கு பெருமையாக உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கைகளை உரிமையுடன் அவர்களிடம் கேட்பேன்.
துப்பறிவாளன் 2 படம் அடுத்தாண்டு வெளியிடப்படும். மிஷ்கினுடன் இணைய நான் தயாரில்லை எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வர மாணவி தேர்வு

Vandhana

நெல்லையில் பயங்கரம்…திமுக செயலாளர் கொலை

G SaravanaKumar

ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

Janani