காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக் கொலை: 6 பேர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 56)…

சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 56) .இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.  அவருக்கு உறுதுணையாக அவரின் மகன் பிரவீன் பணிபுரிந்து வந்தார்.  பிரவீன் பள்ளியில் படித்து வந்தபோது அதே பள்ளியில் படித்த ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தார்.

பள்ளி படிப்பை முடித்தவுடன் பள்ளிக்கரணை அருகே அருகே உள்ள தனியார்
கல்லூரியில் ஷர்மிளா 3 ஆம் ஆண்டு BBA படித்து வந்த நிலையில் இவர்களுக்கிடையே காதல் தொடர்ந்து வந்தது.  இந்த நிலையில் இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெரியார் சுய மரியாதை திருமண அமைப்பின் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்கள் திருமணத்திற்கு பிரவீன் வீட்டில் அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.  இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில்
ஆரம்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெண் உயர் சாதி என்பதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.  அது மட்டுமின்றி சர்மிளாவின் அண்ணன் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு பின்னும் இரண்டு முறை பிரவீன் வீட்டுக்கு சென்று மிரட்டி பஞ்சாயத்து செய்துள்ளார்.  இது சம்பந்தமாக பிரவீன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில்,  சனிக்கிழமையன்று (பிப்.24) இரவு சுமார் 8 மணி அளவில் பிரவீன் ஹோட்டலுக்கு உணவு வாங்க சென்றுள்ளார்.  கடைக்கு சென்றவர் வீடு திரும்பதால் பல மணி நேரம் தேடி உள்ளனர்.  இந்நிலையில் பிரவீனின் அண்ணன் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஒருவர்,  பிரவீனை வெட்டி கொலை செய்தாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.  அங்கு சென்று விசாரித்த போது 5 பேர் கொண்ட கும்பல் பிரவீனை வெட்டியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். வெட்டியதில் படுகாயம் அடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடனடியாக பள்ளிக்கரணை காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரவீனின் அப்பா கோபி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்,  சாதி விட்டு திருமணம் செய்ததால் என் மகனை பெண்ணின் அண்ணன்  உட்பட 6 நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார்.  புகரைப் பெற்றுக் கொண்ட பள்ளிக்கரணை போலீசார் தனிப்படை அமைத்து பிரவீனை வெட்டியதாக தினேஷ் (பெண்ணின் அண்ணன்), ஸ்டீபன்குமார், ஸ்ரீராம், விஷ்ணுராஜ், ஜோதிலிங்கம் அசோக் ஆகிய 6 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.