பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது தாயை தாக்கிவிட்டு தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர். இவர்களது மகன் அசோக்ராஜ்(23).மன நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜ் அதற்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அசோக்ராஜ் மருந்து சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.மேலும் வீட்டில் உள்ளவர்களை அவ்வப்போது தாக்கியும் உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டிலுள்ளவர்களுடன் சணடையிட்டு தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மணிமொழி அருகிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.காலை வீட்டிற்கு வந்த மணிமொழிக்கு பெரும் அதிர்ச்சியாக தனது கணவர் தனது தலையில் காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மணிமொழி உடனடியாக குன்னம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னம் போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அசோக்ராஜை கைது செய்து விசாரித்ததில் அவர்தான் தனது தந்தை செல்வராஜை குச்சியால் பலமாக தாக்கியதாகவும்,அதனாலேயே செல்வராஜ் உயிரிழந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
—-வேந்தன்







