கேரளாவில் நீரோடையில் மிதந்து வந்த புலியின் சடலம் – காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேக்கடி வனப்பகுதியிலுள்ள நீரோடை ஒன்றில் இறந்த நிலையில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலம் வந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். புலியின் இறப்புக்கான காரணம்…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேக்கடி வனப்பகுதியிலுள்ள நீரோடை ஒன்றில் இறந்த நிலையில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலம் வந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். புலியின் இறப்புக்கான காரணம் குறித்து வனப்பகுதியினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் தேக்கடியில் புகழ் பெற்ற பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி, சிங்கம், கரடி உள்ளிட்ட பல அறிய வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்குள்ள நீரோடை ஒன்றியில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலம் ஒன்று இறந்த நிலையில் வந்து கொண்டிருந்தது.

அதனை நீரில் குதித்து உடனடியாக கைப்பற்றிய வனத்துறையினர் புலியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அப்போது புலியின் கழுத்தில் ஏற்கனவே
காயங்கள் இருந்ததையும், புலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதற்கிடையில் இறந்த புலியின் உடலை வனத்துறையினர் அடந்த வனப்பகுதிக்குள் கொண்டு வந்து புதைத்தனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.