குளித்தலை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்ததால் மதுபான கடை வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே“ என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், குடியிருப்பு பகுதிகள், வாரச்சந்தை பகுதிகள், கடைவீதி பகுதிகளுக்கு இடையே உள்ள அரசு மதுபான கடை அமைந்துள்ளது.
இது பொது மக்களுக்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு நிலைகளில் பாதிப்பு ஏற்படுத்துவதால், கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடையை அகற்ற சில நாட்கள் அவகாசம் அளித்தும், கடையை மாற்ற அரசு பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மற்றும் வியாபார சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பழைய ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் அரசு மதுபான கடை ஆகிய இடங்களில் “வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே, கடையை மாற்றாதே, 24 மணி நேரமும் கள்ளச் சந்தையை உருவாக்காதே“ என பிளக்ஸ் போர்டுகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் அரசு மதுபான கடையை அகற்றவும், மக்களுக்கு பல்வேறு நிலைகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அரசு மதுபான கடையை அகற்றக் கூடாது என்று பிளக்ஸ் போர்டு வைத்தவர்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.