ஈரோடு அந்தியூர் அருகே 35 மதிக்கத்தக்க பெண் யானை தன் குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை அறிந்து வந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தினா்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென் பர்கூர் காப்புக்காட்டு வனப்பகுதியில், வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்ட போது வனப்பகுதிக்கு மத்தியில் பெண் யானை தன் குட்டி யானையுடன் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்தனர்.
இதையடுத்து அந்தியூர் வனச்சரங்க அலுவலர் உத்திரசாமிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் 35வயது மதிக்கத்தக்க பெண் யானை தனது குட்டி யானையுடன் மணியாச்சிபள்ளம் நீர் ஓடையில் வரும் போது பள்ளத்தாக்கில் கால் இடறி தவறி விழுந்திருக்ககூடும் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், யானை கோடை காலம் என்பதால் உணவுக்காக மற்றும் தண்ணீருக்காக வன பகுதியை விட்டு வெளியேறும் சூழல் உள்ளதால் யானைகளுக்கு தேவையான வனக் குட்டையில் தண்ணீர் நிரப்ப மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து வனப் பகுதியில் யானை இறப்பு சம்பவம் அதிகரித்து வருவது வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கா. ரூபி