முக்கியச் செய்திகள் குற்றம்

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரான வாதி மற்றும் நடத்துநர் வெங்கடேஸ்வரன் ஆகியோர், கோவையில் இருந்து கரூருக்கு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தனர். காங்கேயம் அருகே பேருந்து வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த 4 பேர், திடீரென பேருந்தின் மீது கல் வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டலும் விடுத்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள்

இதையடுத்து 4 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்த ஓட்டுநர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நூல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் நான்கு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அந்தக் கோபத்தில் அரசுப் பேருந்து மீது கல் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

Saravana Kumar

வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

Halley karthi

27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!

Ezhilarasan