செய்திகள்

ஐசிசி பேட்டிங் தர வரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!

ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்கள் நிறைவடைந்துவிட்டன. டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடரை இழந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைந்துள்ளார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.

மிதாலி ராஜ்

இந்த தொடர் தொடங்கும்போது புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த மிதாலிராஜ், முதல் போட்டியில் முடிந்த பிறகு ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டதால் 762 புள்ளிகளுடன் ஐசிசி பெண்கள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். சுமார் 22 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும், 38 வயதான மிதாலி ராஜ், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். 8 முறை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மிதாலி ராஜ், இளம் வீராங்கனைகளை எல்லாம் பின்னுக்குதள்ளிவிட்டு, 16 ஆண்டுகளுக்கு பிறகும், தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நடிகை டாப்சியுடன் மிதாலி ராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்த மிதாலிராஜ், முதல் போட்டியில் 72 ரன்களும், இரண்டாவது போட்டியில் 59 ரன்களும், இறுதி போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்து  மொத்தம் 206 ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை.. ரயில் சேவைகள் நிறுத்தம்!

Ezhilarasan

6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!

Ezhilarasan

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்பு

Ezhilarasan