முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Redmi Note 10T

Redmi Note 10T ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Redmi நிறுவனம் தனது மொபைல் போன்கள் சீரான இடைவெளியில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், Redmi Note 10T ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் உலக மொபைல் சந்தையில்
அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 10 5G மொபைல் இந்திய சந்தையில் Poco M3
Pro 5G என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், விரைவில் Redmi
Note 10T மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

Poco M3 Pro 5G, Redmi Note 10T மற்றும் Redmi Note 10 5G உள்ளிட்ட மொபைல் போன்கள் ஒரேமாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மொபைல்போனானது அமேசான் தளத்தில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தளத்தில் இதுகுறித்து வெளியான டீசரில் மொபைல் போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால், இந்த மொபைலானது 5G சேவையில் மிக வேகமாக செயல்படும் என்பதை
அறிந்து கொள்ள முடிகிறது. இதுவரை மொபைலின் அதிகாரப்பூர்வ இந்திய சந்தையின்
வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

Redmi Note 10T மொபைலின் விலையானது 4 ஜிபி + 128 ஜிபி இண்டர்னல் மெமரி
கொண்ட மாடல் ரூ.20,500 ஆக இருக்கும் எனவும் இது நீலம், பச்சை, சாம்பல் மற்றும்
வெள்ளி வண்ணங்களில் கிடைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 10T சிறப்பம்சங்கள்

  • ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12 இல் இயங்கும்.
  • இது 6.5 இன்ச் முழு எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே
    கொண்டிருக்கும்
  • மீடியா டெக் டைமன்சிட்டி 700 SoC பிராசசர் கொண்டிருக்கும்
  • 48 மெகா பிக்ஸல் கொண்ட முதன்மை கேமராவுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ, மற்றும் 2
    மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டிருக்கும்
  • 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும்
  • 5,000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வெளியாகும்
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம் தேவை!

Halley karthi

“முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்” – கமல்ஹாசன் அறிவிப்பு!

Gayathri Venkatesan

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 24,898 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு!

Ezhilarasan