திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராம பகுதியில் சட்ட விரோதமாக சில நபர்கள் யானைத் தந்தம் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறை சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ரகசியமாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் மங்களம் கொம்பு பகுதியை சேர்ந்த சுருளி வேல் வயது (34 )பண்ணை காடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் வயது (42) பட்டலங்காடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் வயது (23) மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த யானை தந்தத்தை கைப்பற்றினார்கள்.
மேலும், மூவரிடமும் அவர்களுக்கு யானைத் தந்தம் எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு யாரும் விற்றார்களா? அல்லது வனப்பகுதியில் இருந்து கிடைத்ததா? இதுபோன்று வேறு ஏதும் குற்ற வழக்குகள் உள்ளதா என்ற கோணங்களில் வத்தலகுண்டு வன சரகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







