“மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என  சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று  தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்…

மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என  சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று  தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சாஹிராம் பெஹல்வானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,  ,”தேர்தலுக்கு  முன் முதலமைச்சரை சிறையில் அடைத்தார்கள். அவரது குரலை அடக்குவதற்காக இது நடந்துள்ளது. சர்வாதிகாரம் உச்சத்தில் உள்ளது. தயவுசெய்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள். தயவு செய்து வாக்களியுங்கள்” என்றார்.

“உங்கள் முதலமைச்சரும், என் கணவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் குரலை ஒடுக்குவதற்காக தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.