மழை காரணமாக நிரம்பி வழியும் வந்தவாசி ஏரியில் துள்ளிக்குதிக்கும் மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வந்தவாசி ஏரியில் நிரம்பி இருக்கும் நீரில் ஆள் உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் மீன்களை சிறுவர் முதல் பெண்கள் வரை பிடித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பெரிய ஏரியில், தற்போது தொடர்மழை காரணமாக ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் அதிக மீன்கள் காணப்படுவதால் அவை வெளியே செல்லாமல் இருக்க, மதகுகளிள் வலை கட்டப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் மதகுகள் அருகே ஆள் உயரத்திற்கு மீன்கள் துள்ளி குதிக்கின்றன. இதை ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் அவ்வழியாக செல்பவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். சிலர் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிறுவர் முதல் பெண்கள் வரை அந்த மீன்களை வலைகள் மூலம் பிடித்து வருகின்றனர்.