திருச்சி அருகே ஆற்றுப்பாலம் உடைந்ததால், மழை, வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது.
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) சென்னையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ்m தொடர் நேரலையை, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்புகளையும், தீர்வுகளையும் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் அரியாற்றில் தடுப்புப் பாலம் உடைந்ததால் புங்கனூர் கிராமத்துக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. தீரன், திருநகர் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்குள் ஏற்கனவே தண்ணீர் புகுந்ததால், மணல் மூட்டைகள் போடப்பட்டு தடுப்புகள் ஏற்பட்டன. ஆனால், நேற்றிரவு முதல் பெய்துவரும் மழை காரணமாக அதையும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் வெள்ள நீர் வயல்களுக்குள்ளும் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
இங்கிருந்து அரை கி.மீ தூரத்தில் திருச்சி நகரம் இருக்கிறது. இந்த தண்ணீர் நகரம் நோக்கி செல்வதால், அங்குள்ள வீடுகளில் வெள்ளநீர் புகும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி நீக்கினால் மட்டுமே இதற்கான சரியான தீர்வாக இருக்கும் என்றும் அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.