பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.…

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க 20 கோடி
மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தை இன்று நகர்ப்புற வளர்ச்சித் துறை
அமைச்சர் கே. என் .நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அப்போது கே. என் .நேரு பேசுகையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவிலேயே குடிநீர் வழங்கல் துறையில் 26 வது இடத்தில் இருந்தது. திமுக பொறுப்பேற்று எட்டே மாதங்களில் முதலிடத்திற்கு வந்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் 30,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கோவை, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு திட்டத்திற்கும் 500 கோடி விதம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.