வேலுார் மலைப்பகுதியில் டி.ஐ.ஜி, எஸ்.பி தலைமையில் ட்ரோன் கேமரா மூலம் சாராய வேட்டை நடத்தப்பட்டது.
வேலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பது, கடத்துபவதை தடுக்க வேலுார் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வேலுார் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் வேலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் இன்று அணைக்கட்டு அல்லேரி மலை மீது ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் 20 குழுவாக விரிந்து மதுவிலக்கு பிரிவினர் திடீர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சுமார் 3050 லிட்டர் சாராய ஊரல்கள், 870 லிட்டர் நாட்டுச் சாராயம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோதமாக விற்கப்பட்ட 18 மதுபான பாட்டில்களை கைப்பற்றியும், கள்ளச்சாரயம் கடத்த பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளனர்.
அனகா காளமேகன்






