முக்கியச் செய்திகள் தமிழகம்

13 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் கொட்டித் தீர்த்த மழை

சென்னையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரம் தொடங்கி இரவு வரை தினமும் மழை பெய்து வருகிறது. இந்த மாதத்தில் நேற்று வரை சென்னையில் 220.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக இதற்கு முன்பு கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 243.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது.

இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், தற்போது இந்த அளவை எட்டி உள்ளது. வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் மட்டும் 137.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 1813-ம் ஆண்டுக்கு பிறகு நுங்கம்பாக்கத்தில் இரண்டு நாள் அதிக மழைப்பதிவு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மீனம்பாக்கம் பகுதியிலும் ஜூலை மாதம் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மைய கணக்கீட்டுப்படி சென்னையில் இயல்பை விட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில்க்  மீனம்பாக்கத்தை விட அதிகமாக நுங்கம்பாக்கத்தில் மழை அளவு பதிவாகியுள்ளது.

Advertisement:

Related posts

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடி

Nandhakumar

ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள்!

Jeba Arul Robinson

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

Jeba Arul Robinson