முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சம்மன் அனுப்பப்பட்ட மூன்று ஆசிரியைகள், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஐந்து ஆசிரியைகளுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதில் மூன்று ஆசிரியைகள் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். வழக்கு விசாரணை தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஆசிரியைகள் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

Gayathri Venkatesan

குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்

Ezhilarasan

கணவரை பிரிந்து வாழ்வதால் பறிக்கப்பட்ட Mrs.Srilanka அழகி பட்டம்!

Saravana Kumar