நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பேசிய புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடுவோர் அனைவரும் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். மேலும், தங்களுக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இடப்பங்கீடு தொடர்பாக திமுக-விசிக பேச்சுவார்த்தை
இதனிடையே, விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியது என மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பொது சின்னம் ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், விஜய் மக்கள் இயக்கம் பதிவு செய்யப்படாத காரணத்தால் ஆட்டோ சின்னம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







