நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக தரப்பில் வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, பாஜக தரப்பில் சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தர மறுப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக பாஜக ஆலோசனை மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது இடப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதில், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக இடங்களை கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 3 வார்டுகளை கேட்டுப்பெறவும் பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் எதிர்பார்ப்புக்கு அதிமுக இடம் கொடுக்குமா இல்லை, அதிமுக சமரசம் செய்துகொள்ளுமா என்பது அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்புதான் தெரியவரும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








