முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஜூலை 19 ல் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

மக்களவை சபாநாநகர் ஓம் பிர்லா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 19-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும்.

மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் காலை 11 மணி அளவில் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து உறுப்பினர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம்.

அவை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் 311 மக்களவை உறுப்பினர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.

சில உறுப்பினர்கள் கொரோனா அறிகுறி இருந்ததாலும், மருத்துவ காரணங்களாலும் தடுப்பூசி இன்னும் செலுத்தி கொள்ளவில்லை. அதே போல் நாடாளுமன்ற ஊழியர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வருகிற 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி

Mohan Dass

வங்கிகளில் மொழி பிரச்சனை வராமல் இருக்க என்ன நடவடிக்கை?- மத்திய இணை அமைச்சர் விளக்கம்

Web Editor

பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனை

Jayasheeba