தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் கதையை இயக்குநர் செல்வராகவன் மாற்றி யுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ’த கிரே மேன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புக்காக அமெரிக்க சென்றிருந்த அவர், படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். கார்த்தி நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இப்போது நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்து வரும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, இயக்குநர் கள், மித்ரன் ஜவஹர், சேகர் கம்முலா, ராம்குமார் இயக்கங்களில் உருவாகும் படங்களில் அவர் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இதற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, படத்தின் தலைப்பை கமர்சியலாக மாற்றி வேறு தலைப்பை வைக்கலாம் எனவும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ’நானே வருவேன்’ கதையை மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தக் கதையை அப்படியே வைத்துவிட்டு, தனுஷ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கதையை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அதற்கு ’ராயன்’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.