முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேகதாது விவகாரத்தில் அரசின் முயற்சிக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆதரவு

மேகதாது விவகாரத்தில் அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியிடமும் இதை வலியுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மேகதாது பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியது. அதில் கலந்துகொண்ட பின் கட்சித் தலைவர்கள் கூறியதாவது:

கே. எஸ். அழகிரி (காங்கிரஸ்): தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பேசியிருக்கிறோம். நதி நீர்ப் பிரச்சனை தேசிய பிரச்சனையாக வராது. எங்கள் நிலை சரியான நிலை.

வேல்முருகன் (தவாக): சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் வரும்போதெல்லாம் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் உயிர், உடைமைக்கு பாதுகாப்பில்லை.

நயினார் நாகேந்திரன் (பாஜக): தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக ஆதரவு வழங்கும். தமிழ்நாட்டின் நலன் என்று வரும் போது மக்களுக்காகத்தான் பேச வேண்டும். தமிழ்நாடு மக்கள் நலன்தான் பாஜக நிலைப்பாடு.

கொங்கு ஈஸ்வரன் (கொமதேக): யார் அவர்களுக்கு தைரியம் கொடுத்து செயல்பட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

ஜெயகுமார் (அதிமுக): மேகதாது அணை எந்த வகையிலும் கட்டக் கூடாது என திட்டவட்டமாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு வழங்கும். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. . தமிழ்நாடு மக்கள், விவசாயிகள் நலன் தான் கருத்தில் கொண்டுள் ளோம்.

கே பாலகிருஷ்ணன் (மார்க்.கம்யூ): சட்டப் போராட்டங்களை நடத்துவதற்கு, ஒன்றிய அரசை வலியுறுத்த இணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தும் நடவடிக்கை களுக்கு உறுதுணையாக செயல்படுவோம்.

முத்தரசன் (இந்திய. கம்யூ): கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஒப்புக்கொள்ளக்கூடாது. பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று ஒத்தக்கருத்துடன் முடிவு

திருமாவளவன் (விசிக): நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது விவகாரத்தை தமிழக எம்பிக்கள் ஒருமித்த கருத்தை எழுப்புவோம்.

கோ க மணி (பா.ம.க) :  ஒரே குரலில் ஒன்றாக ஒலிக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் கடைமடை மாநிலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சகோதர மாநிலங்கள் என்ற உணர்வோடு கர்நாடக அரசு செயல்பட வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவர்களிடையே கார்ல் மார்க்ஸை மேற்கோள்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

Halley Karthik

பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

G SaravanaKumar

”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya