பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் இருந்தே “பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற…

அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் இருந்தே “பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில் தேர்வுகள் மற்றும் அவை ஏற்பத்தும் மனஅழுத்தம் உள்ளிட்டவை குறித்த மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் விருதுநகர் பி.எஸ். சி ஆங்கிலப் பள்ளியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று மாணவர்களுடன் கலந்துரையாடும் “பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களிடையே உள்ள தேர்வு பயத்தை நீக்கி மன தைரியத்துடன் அவர்களை தேர்வை எதிர்கொள்ளச் செய்யும் வகையில் ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த நிகழ்ச்சி மூலம் நட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடி உள்ளார்.

மேலும் அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் இந்த ஆண்டு அமையும். டெல்லி – மும்பையிடையேயான எஸ்பிரஸ் சாலைப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. விரைவில் இந்த சாலை வாகன போக்கு வரத்திற்காக திறந்து விடப்படும். சாலை கட்டமைப்புக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு ஏராளமான நிதி அளித்துள்ளது. சென்னை துரைமுக சாலை பணிகளுக்கும் தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பந்தூர் விமான நிலைப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் தமிழக அரசின் முடிவு. இந்த திட்டம் முடிக்கப்பட்டால் தமிழகத்திற்கான விமான சேவை மேலும் விரிவடையும் என்று வி கே சிங் தெரிவித்துள்ளார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.