காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை ஒரு லட்சத்து 10
ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் சாதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் அதே
பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய அந்த பெண் ஆனந்தராஜுடன் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள, பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்திய நிலையில்
ஆனந்தராஜ் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இது குறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல்
நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது,
வழக்கின் விசாரணையில் ஆனந்தராஜுக்கு 11 வருடம் சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.