உலக பணக்காரர்கள் பட்டியல் – 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் கெளதம் அதானி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான சில தினங்களில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான அதானி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் கெளதம் அதானி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான சில தினங்களில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலகின் முன்னணி நிறுவனமான அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கின. இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.

இதன் காரணமாக  உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 7வது இடத்துக்கு அதானி தள்ளப்பட்டுள்ளார்.  போர்ஸ் பத்திரிகை வெளியிடக்கூடிய பணக்காரர்கள் பட்டியலில் அதானியின் சொத்துமதிப்பு 2250 கோடி டாலர் சரிந்துள்ளது. அவரின் தற்போதைய சொத்துமதிப்பு  9,680 கோடி டாலராக உள்ளது. தற்போதைய பட்டியலின் படி, பில்கேட்ஸுக்கு அடுத்தபடியாக அதானி 7-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அதானி தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பட்டியலின் படி பெர்னார்டு அர்ணால்ட் முதலிடத்திலும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.