முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு; 8 பேரிடம் போலீசார் விசாரணை

குண்டு வீசி ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன், ஆதனூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரில் இருந்து இறங்கி சிலம்பம் நகர் பகுதிக்குள் தப்பியோடினார். ஆனால், அவரைச் சுற்றிவளைத்த மர்மகும்பல் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த வெங்கடேசன், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வெங்கடேசனை கொலை செய்வதற்காக மர்மகும்பல், துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்; திருமணத்தில் முடிந்தது

G SaravanaKumar

மார்ச் 8 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்?

EZHILARASAN D

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு

G SaravanaKumar