கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உயிரிழந்திருப்பது காவல்துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்து வந்தவர் ஈஸ்வரன். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் உடல் நிலை இன்று மோசமானது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மறைந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கொரோனா காரணமாக,காவல்துறையினர் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது







