வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மே 10-ம் தேதி முதல் 24ம்…

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் இ -பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களை 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்துதல் காட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் பின்பற்ற வேண்டிய கொரனா தடுப்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.