கொரோனா பாதித்தவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் ரெம்டெசிவிர் தொடர்பான சூமோட்டோ வழக்கு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் ரெம்டெசிவிர் தொடர்பான சூமோட்டோ வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 9 பேர் மரணம் அடைந்துள் ளது குறித்து முறையிட்டப்பட்டது.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை என்றும், பிற மருத்துவ மனைகளிலிருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச டெண்டர் விட இருப்பதாகவும் ரெம்டிசிவிர் விற்பனையை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு கூடுதல் கவுண்டர்களுடன் மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஆம்புலன்சில் காத்திருப் பதற்கு பதிலாக மருத்துவர் கண்காணிப்பில் மருத்துவமனை வளாகத்தில் இருப்பது போல, ஸ்ட்ரெக்சரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் எனவும், அதற்கான கூடுதல் ஸ்ட்ரெக்சர்களை ஏற்படுத்தவும் வலியிறுத்தினர்.

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அடிப்படையில் உயர்வாக இருந்தாலும், சதவீதத்தில் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது என்றும், ஆனால் புதுச்சேரி யில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். புதுச்சேரியில் 3800 படுக்கைகள் மட்டுமே உள்ளது போதுமானதல்ல என்றும் எச்சரித்துள்ளனர்.

மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தலாம் எனவும் இந்த இக்கட்டான சூழலில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை களில் ஓரளவு திருப்தி அடைவதாகவும் தெரிவித்து வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கொரோனாவிற்கு பலியானவர்களின் உடலை ஒப்படைக்கவும் தகனம் செய்யவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.