10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று இரவு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் குரூப்-1 பிரிவை சேர்ந்த இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகரமாக கணக்கை தொடங்கியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நெதர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. மறுபுறம், முதல் வெற்றிக்காக நெதர்லாந்து அணி போராட இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




