பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி.இவர் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்…

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி.இவர் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் என கூறப்படுகிறது.இவர் கள்ளகிணறு பகுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அந்த இளைஞருக்கு ஒரு மாத காலம் விடுமுறை கிடைத்ததால் தனது சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு இருந்த வட மாநில இளைஞர்கள் சிலர் சகாதேவ் சவுத்ரியிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினர்.

நாங்களும் அதே ஊருக்கு தான் செல்கிறோம் என பேச்சு கொடுத்த அந்த இளைஞர்கள் சகாதேவ் சவுத்ரிக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை கொடுத்துள்ளனர்.
அவரும் ஒரே ஊர்காரர் என்ற எண்ணத்தில் அந்த வாங்கி பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார்.அடுத்த சில நிமிடங்களில் சகாதேவ் சவுத்ரி மயக்க நிலைக்குச் சென்றதும், அவரிடம் இருந்த 23 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு அவரது பைகளையும் ஆடைகளையும் பறித்துக் கொண்டு நிர்வாண மான முறையில் ரயில் நிலையம் அருகே வீசிப்பட்டு சென்றுள்ளனர்.

அடுத்த மூன்று நாட்களாக மயக்க நிலையில் நிர்வாணமாக கிடந்த சகாதேவ் சவுத்ரியை நேற்று அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பல்லடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மீண்டும் சகாதேவ் சவுத்ரி அவர் பணிபுரியும் இடத்திற்க்கு வந்து பாதுகாப்பு அதிகாரியிடம் நடந்ததை கூறினார். இன்னும் எனக்கு மயக்க நிலையாகவே உள்ளது என தெரிவித்தார் பிறகு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.