முக்கியச் செய்திகள் தமிழகம்

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?-அமைச்சர் சிவசங்கர் பதில்

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுமார் ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆகஸ்ட் 13ம் தேதியிலிருந்து 15 தேதி வரை தொடர் விடுமுறை விட்டிருந்த நேரத்தில்
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில் போக்குவரத்து ஆணையர் முன்னிலையில் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன. அப்படி ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 953 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அபராதம் 11 லட்சத்து 4000 ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டிருக்கிறது

பொதுமக்களுக்கு இதுபோல விழாக் காலங்களில் கூடுதல் விடுமுறை வருகின்ற நாட்களில் அவர்களுக்கான தேவையான பேருந்துகளை அரசு ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு முறையும் இந்த பிரச்னைகள் தொடர்து எழுகின்ற காரணத்தினால் இன்று போக்குவரத்து துறை ஆணையர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

அக்டோபர் மாதமும் தீபாவளிக்கு தொடர் விடுமுறை வருவதால் அதை எதிர்நோக்கி எப்படி கையாள்வது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல நேற்று 18ம்  தேதியிலிருந்து மீண்டும் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 தேதி காலை வரை ஆய்வு பணிகள் தொடரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வாரம் வார இறுதி நாட்களுடன் சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பலரும் பயணம் செய்தனர். பெரும்பாலாவனர்கள் தனியார் பேருந்துகளை பயன்படுத்தினர்.

அப்போது விமானக் கட்டணத்துக்கு நிகராக பெரும்பாலான தனியார் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தமிழக அரசு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலித்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் கார்த்தி படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கர் மகள்

G SaravanaKumar

காஞ்சிபுரம் கல்குவாரியில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள்..!

Jayapriya

மத்திய அரசு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் ரத்து: புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

எல்.ரேணுகாதேவி