முக்கியச் செய்திகள் பக்தி

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  நான்காம்கால யாக பூஜைகள் இன்று துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி
நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி திருஆவினன்குடி
திருக்கோவில் விளங்கினாலும், மலைக்கோவிலே பிரதானமாக விளங்குகிறது.
மூன்றாம்படை வீடான பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் பழனி
மலைக்கோவிலுக்கும் சென்று பழனியாண்டவரை தரிசனம் செய்வர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தின் முதன்மை கோவிலாகவும், தமிழ்கடவுள் முருகனின் கோவில்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, போகர் சித்தரால் ஒன்பது விதமான நவபாஷாண மூலிகைகளை கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட திருமேனியுடன் இன்றும் கம்பிரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பழனி முருகனுக்கு மருந்துசாத்தும் பணி நடைபெற்று வருகிறது.

8காலயாகபூ கடந்த 23ம்தேதி மாலை முதல்கால யாக பூஜையுடன் துவங்கி நேற்று மாலை
வரை மூன்று கால யாக பூஜைகள் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை 9மணியளவில் நான்காம் காலையாக வேள்விகள் துவங்குகிறது. கும்பாபிஷேகத்தின் முதல்கால யாகபூஜை இன்று மாலை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் துவங்கியது‌‌.

வருகிற 27ம்தேதி அதிகாலை வரை 8கால யாகபூஜைகள் நிறைவடைகின்றன. பழனி மலைக்கோவில் மேல் பிரகாரத்தில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகளில் 90யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் ஒவ்வொன்றிலும் மலைக்கோவில் மூலவர் உட்பட உபகோவில் பரிவார தெய்வ விக்ரகங்கள் வரை உள்ள சக்தியை, புனிதநீர் அடங்கிய புனித கலசங்களில் உருஏற்றி யாகசாலைகளில் வைத்து, பல்பொருள்வேள்வி, இலை,பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுசுவை சாதம், பால், தயிர், தேன், நெய், 12 வகை மூலிகை சமித்து குச்சிகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வேதமந்திரங்களும், தமிழ்மறைகளும் ஓத யாகங்கள் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து வரும் 26ம்தேதி மலைக்கோவில் மூலவர் ராஜகோபுரம் தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு 26ம் தேதி காலை 9.50முதஷ்
11மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து 27ம் தேதி காலை 8 மணி
முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம்
அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேக
விழாவையொட்டி வருகிற 27ம்தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தன்று காலை 9:30 மணி வரை
குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு
கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை
சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், பழைய நாதஸ்வரம் பள்ளி வளாகம் உள்பட மூன்று இடங்களில் நாள்முழுவதும் நேற்று மாலை முதல் வருகிற 27ம்தேதி வரை அன்னதானம் துவங்கப்பட்டுள்ளது‌. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இருப்பினும் பழனியில்‌ தற்போது மூலவர் தரிசனம் கிடையாது என்பதால் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி
காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சல்மான் கானுடனான எட்டு ஆண்டு வாழ்க்கை மிக மோசமானது”: மனம் திறந்த நடிகை சோமி அலி

Web Editor

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் எம்.பி

G SaravanaKumar

உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்; அதிமுக

G SaravanaKumar