பாபர் ஆஸமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டயிலும் அதிக ரன்கள் எடுத்து பாபர் ஆஸமின் சாதனையை சுப்மன் கில் சமன் செய்தார்.     இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும்…

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டயிலும் அதிக ரன்கள் எடுத்து பாபர் ஆஸமின் சாதனையை சுப்மன் கில் சமன் செய்தார்.

 

 

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் சதத்தையும்,  சுப்மன் கில்  72 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.