மதுரை பாலமேடு மற்றும் திருச்சி-சூரியூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் இருவர் உயிரழந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையக நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது. நண்பகல் வரை 5 சுற்று முடிவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 9 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜன் (25) வயிற்றில் காயங்களுடன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வு அரங்குக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன்
ரத்தினவேல் இறப்பை உறுதி செய்தார். இதுவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினகரன் நாளிதழ் செய்தியாளர் திருமலை சீனிவாசன் மற்றும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 6 பேர் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல திருச்சி-சூரியூரில் காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த பார்வையாளர் அரவிந்த் தலையில் பலமாக அடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.