ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் – ராஜமவுலி நெகிழ்ச்சி

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு, புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு…

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு, புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி அண்மையில் பிரபல ஹாலிவுட் விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை வென்றார்.

மேலும் இந்த திரைப்படம் 2 அமெரிக்க திரைப்பட விமர்சகர் விருதையும் வென்றுள்ளது. இது தொடர்பாக வாஷிடங்டனில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமவுலி, அவதார் 2 திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார்.

இதுகுறித்த புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஜேம்ஸ் கேமரூன், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததாகவும், அவரது மனைவி சுஜிக்கு அந்த படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்ததுடன், மீண்டும் இரண்டாவது முறையாக ஆர்ஆர்ஆர்-ஐ பார்த்ததாகவும் கூறியுள்ளார். தம்முடன் 10 நிமிடம் கேமரூன் செலவிட்டதை இன்னும் நம்பமுடியவில்லை என்றும், அவர் கூறியது போல் தற்போது தான் உலகின் உச்சியில் இருக்கிறேன் என்றும் ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.