திமுக வைத்துள்ளது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி – அமைச்சர் மஸ்தான்

திமுக வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை அடிப்படையில் கூட்டணி  என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபாண்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், யார் எந்த…

திமுக வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை அடிப்படையில் கூட்டணி  என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபாண்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், யார் எந்த காலகட்டத்தில் எதை பற்றி பேசினாலும் எங்களுடைய கொள்கையில் நாங்கள் உறுதியாக இருந்து வருகிறோம். ஆளுநர் எதை பேசினாலும் அது எடுப்படவில்லை என்றால் மழுப்ப பார்கிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. இது கடந்தகால முதலமைச்சர்களுக்கும் நடந்துள்ளது என தெரிவித்தார்.

கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும் என அண்ணாமலை கூறுவது பற்றி பேசிய அமைச்சர் மஸ்தான், ”கண்ணியம் என்ற வார்த்தையை யார் பயன்படுத்தினாலும் அதை வரவேற்கிறன். ஆனால், ஒருவரை சுட்டி காட்டும் போது நான்கு விரல்கள் தன்னை பார்ப்பதாக அண்ணா கூறியிருக்கிறார்.  கண்ணியம் என்ற வார்த்தையை யார் பயன்படுத்தினாலும் முதலில் தானும் கண்ணியமாக இருக்கவேண்டும் என்று உணர வேண்டும். அது அண்ணாமலையாக இருந்தாலும் அது யாராக இருந்தாலும் சரி” என அமைச்சர் மஸ்தான் கூறினார்.

மேலும், தேர்தலுக்கு பிறகு பாமகவின் அறிக்கை ஆளும் அரசுக்கு சாதகமாக உள்ளதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் மஸ்தான், “ பாமக நிறுவனர் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தல் முடிந்த போதும் தெளிவாக  குறிப்பிடுவார். தேர்தல் நேரத்தில் நாங்கள் தேர்தலுக்காக அதிமுகவுடன் அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்றும் தேர்தல் முடிந்த பிறகு தங்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்றும் தெளிவாக கூறுவார். எனவே அதில் தலையிட முடியாது” என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.