பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீண்டகாலமாக தொடரும் அரசியல்வாதிகள், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட அரசியல் குழப்பம், இந்தியாவுடன் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துவிட்ட சூழலில் ஐஎம்எப்-விடம் அதிக கடன் பெற்றுள்ளது. தற்போது மீண்டும் நிதியுதவி கேட்டு பாகிஸ்தான் காத்திருக்கிறது. ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு பல்வேறு நிபந்தனைகளை வைத்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் விலையும் உணவு பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. பால், இறைச்சி போன்ற உணவு பொருள்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 210 ரூபாய்க்கும் ஒரு கிலோ சிக்கன் 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அண்மைச் செய்தி: ’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 272 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 280 ரூபாயாக அதிகரித்துள்ளது. டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 12.90 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் 202.73 ஆக விற்கிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.