அதிமுகவின் நலத்திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் காகித பூ என சிவகங்கை மாவட்டம் கல்லுப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லுப்பட்டியில், காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர். ப.சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கல்வி கடன் வழங்கியதில் ஏழை, எளிய மாணவர்களும் பொறியியல் பட்டதாரி ஆனதாகக் கூறிய ப.சிதம்பரம், பாஜக கல்விக்கடனை நிறுத்தி அதன் கதவை இழுத்து மூடியுள்ளதாக விமர்சித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக இந்தி மொழி பேசுபவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்று கூறிய சிதம்பரம், இந்த தேர்தலில் மக்கள் எச்சரிக்கையோடு வாக்களிக்க வேண்டும் என்றார்.