தேனியில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நடிகரும், மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் போடி நகர் பகுதி, கோடாங்கிபட்டி, பத்ரகாளிபுரம் மற்றும் விசுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
கோடாங்கிபட்டியில் பேசிய நடிகர் கார்த்திக், உன்னை அறிந்தால்!, நீ அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிற எம்.ஜி.ஆர் பாடலுக்கு உதாரணமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்ந்து வருவதாகத் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார்.