Skip to content
February 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » delhi man deletes 1200 microsoft user accounts in us
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்டின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபர் கைது

தன்னை பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்ட் ஊழியர்களின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர்…

Author Avatar

Gayathri Venkatesan

March 25, 202110:40 am microsoftusers accountworld

தன்னை பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்ட் ஊழியர்களின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தால் கலிபோர்னியாவின் கால்ர்ஸ்பேட்டில் (Carlsbad) உள்ள மைக்ரோ சாப்டின் தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். இடம்பெயர்வு தொடர்பான அலுவல்களுக்கு உதவியாளராக அவர் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை தீப்பன்ஷூ பூர்த்தி செய்யததால், 2018ம் ஆண்டு மே மாதம் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய அவர், பணி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில் மைக்ரோ சாப்டின் சர்வரை ஹேக் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 1,200 ஊழியர்களின் கணக்குகளை நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் சார்ப்பில் அமெரிக்காவின், கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிறுவனத்தின் சார்பில் வாதாடிய ரான்டி கிராஸ்மேன் கூறுகையில் ‘மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை பழி தீர்க்கும் விதமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். மேலும் இது நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது’ என்றார்.

மேலும் இதுதொடர்பாக நிறுவனத்தின் துனை தலைவர் கூறுகையில், தீப்பன்ஷூ கீர்-யின் இந்த செயல் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மைக்ரோ சாப்ட் ஊழியர்கள் தங்கள் இ-மெயில், அறிமுகமானவர்களின் எண்களின் பட்டியல் போன்ற பல முக்கிய விஷயங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக எந்த தகவலும் தீப்பன்ஷூக்கு சென்று சேரவில்லை. இந்நிலையில் அவர் வேறு வேலை விஷயமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கவிற்கு சென்றிருந்தார். அப்போது காவல் துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதையடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

’தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்….!

By Web Editor February 19, 2026

விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.21-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை……!

By Web Editor February 19, 2026

“பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்க” – வைகோ வலியுறுத்தல்!

By Web Editor February 19, 2026

ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு: ஓராண்டாகியும் உறுதிமொழியை நிறைவேற்றாத திமுக – அன்புமணி!

By Web Editor February 19, 2026
#ट्रेंडिंग हैशटैग:microsoftusers accountworld

Post navigation

Previous Previous post: ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : ப.சிதம்பரம்!
Next Next post: போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading