“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

“Our language is not weak!” - Praise from Chief Minister M.K. Stalin!

தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட, யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 2000ம் ஆண்டு முதல் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், உலகத் தாய்மொழி தினத்தை கொண்டாடும் வகையில், தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.