கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை 182 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையின்போது அவர், கன்னியாகுமரியில் பயிரிடப்படும் மத்தி வாழைக்குப் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், ஹெக்டருக்கு 2 ஆயிரம் ரூபாய் என பாதிப்பு ஏற்பட்டுள்ள மொத்த நிலங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித் தார்.
தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத்தொகை வழங்க அரசாணை வழங்கப்பட்டுள் ளதாகக் குறிப்பிட்ட அவர், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 182 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித் தார்.







