முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு 23 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத் துள்ளது.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்
வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தன. புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11 ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயம் பற்றி பேசிவிட்டதாகவும் தான் பேசியது தவறு என தெரிந்ததும், தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், சிறையில் அடைத்துள்ள தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது, எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண் டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கும் ஜாமின் வழங்க கூடாது என விசிக துணைப் பொது செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram