எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
3 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் கே.பாண்டியன் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.
சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் உடன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனையின் போது சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டது. இபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








